Last Updated : Saturday, 18 February 2017 07:19:12
Call Us : 0452 - 2642323

NFTE Madurai News

  • அதிகாரிகள் சங்கத்தேர்தல் முடிவுகள்

    07/12/2016 அன்று நடைபெற்ற 
    அதிகாரிகள் சங்கத்தேர்தல் முடிவுகள் 
    அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
     
    மொத்த வாக்குகள்  = 44412
    பதிவான வாக்குகள் = 42007
    செல்லாத வாக்குகள் = 251
     
    முதலிடம் SNEA சங்கம்  = 20128 வாக்குகள்  - 45.32 சதம் 
    இரண்டாமிடம் AIBSNLEA சங்கம் = 18438 வாக்குகள் - 41.52 சதம் 
    மூன்றாமிடம் AIBSNLOA  சங்கம் = 760 வாக்குகள் - 1.71 சதம் 
     
    அதிகாரிகள் சங்க அங்கீகார விதிகளின்படி..
    35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று...
    முதலிடம் பெற்ற...SNEA சங்கம் 
    முதன்மைச்சங்கம் என்ற தகுதியைப் பெறுகிறது..
     
    15 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று...
    இரண்டாமிடம் பெற்ற... AIBSNLEA சங்கம் 
    SUPPORT ASSOCIATION என்ற தகுதியைப் பெறுகிறது.
     
    வெற்றி பெற்ற சங்கங்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

  • நமது மத்திய சங்கம்

    வீட்டு வாடகைப்படி மற்றும் திறன் வளர்ப்புப்படி
    78.2 IDA அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
    ஆனால் TRAVELLING ALLOWANCE  மற்றும் 
     மருத்துவ சிகிச்சைக்கான பில்கள் 68.8 IDA 
    அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
    இவற்றையும் 78.2 சத IDA அடிப்படையிலேயே     
    வழங்கப்பட வேண்டும்  என  நமது மத்திய சங்கம்
     நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

  • CORPORATE

    2015-16ம் ஆண்டிற்கான JTO இலாக்காதேர்விற்கான காலியிடங்களை உடனடியாகக் கணக்கிட்டு அனுப்புமாறு மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. 2014-15ம் ஆண்டிற்கான காலியிடங்களை நிரப்பியது போக மிச்சம் உள்ள காலியிடங்களையும் சேர்த்துக் கணக்கிடுமாறு 
    மாநில நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
     

  • கல்வி உதவித்தொகை

    BSNL ஊழியர்களது குழந்தைகளுக்கான 2016-17ம் ஆண்டிற்கான  TECHNICAL AND NON-TECHNICAL படிப்புகளுக்கான  கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்கோரப்பட்டுள்ளன. 
    விண்ணப்பிக்க கடைசி நாள்: 30/11/2016.
     

  • 7வது ஊதியக்குழு பரிந்துரை

     7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 01/01/2016 முதல் ஓய்வூதியச் சலுகைகள் உயர்த்தப்பட்டன. பணிக்கொடை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500/லிருந்து ரூ.9000/= என உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த உயர்வுகள் இன்னும் BSNLலில் அமுல்படுத்தப்படவில்லை. இவற்றை உடனடியாக அமுல்படுத்துமாறு  நமது மத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓய்வூதியர் சங்கங்களும் இப்பிரச்சினையைத் தீவிரப்படுத்த வேண்டும்.