Last Updated : Saturday, 18 February 2017 07:19:12
Call Us : 0452 - 2642323

Latest News

 • கோழிக்கோடு மத்திய செயற்குழுத் தீர்மானங்கள்

  கோழிக்கோடு மத்திய செயற்குழு தீர்மானங்கள்
   
  பிப்ரவரி 13 மற்றும் 14 தேதிகளில் கேரள மாநிலம் 
  கோழிக்கோடு நகரில் நடைபெற்ற NFTE மத்திய செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
   
  நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி BSNL மற்றும் ITI நிறுவனங்களை விற்கத்துடிக்கும் மத்திய அரசின் மோசமான பொதுத்துறை விரோதக் கொள்கையை எதிர்த்து அனைத்து சங்கங்களுடன் இணைந்து கடுமையாகப் போராடுவது.
   
  செல்கோபுரம் துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியை எதிர்த்துப் போராடுவது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரிக்கு
  தபால் அட்டை அனுப்பும் இயக்கம் நடத்துவது.
   
  பொதுத்துறை அதிகாரிகளுக்கான நீதிபதி சதீஷ்சந்திராவின் 
  3வது ஊதிய திருத்த அறிக்கையை மத்திய அரசு
  உடனே வெளியிட வேண்டும். பொதுத்துறை ஊழியர்களுக்கான சம்பளப் பேச்சுவார்த்தைக்கான வழிகாட்டுதலை DPE உடனடியாக வெளியிட வேண்டும். BSNL நிறுவனம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஊதியப் பேச்சுவார்த்தைக்குழுவை அமைக்க வேண்டும்.
   
  8 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் போனசை மீட்டுத்தந்த மத்திய சங்கத்திற்கு வாழ்த்துக்களை செயற்குழு உரித்தாக்குகிறது. 2015-16ம் ஆண்டிற்கான போனசைப்பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
   
  ஓய்வூதியர்களுக்கான 78.2 IDA பிரச்சினையைத் தீர்த்து வைத்தமைக்காகவும், ஓய்வூதியப்பங்களிப்பான 
  60:40 முறையை நீக்கியமைக்காகவும் மத்திய செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
   
  78.2 சத சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி பெற்றுத்தந்த மத்திய சங்கத்தை மத்திய செயற்குழு மனதார பாராட்டுகிறது.
   
  TTA மற்றும் TM பதவிகளில் 15 சத இடங்கள்
  சேவை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
   
  வணிகப்பகுதிகள் உருவாக்கத்தில் நிர்வாகம் சங்கங்களைக் கலந்து ஆலோசிக்காததை செயற்குழு கண்டிக்கிறது.
   
  வங்கிகளில் உள்ளது போல் 4வது சனிக்கிழமை

  விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும்.

 • அனைத்து சங்க கூட்டம்

  அனைத்து சங்க கூட்ட முடிவுகள்
  06/02/2017 அன்று NFTE  பொதுச்செயலர் தோழர்.C.சிங் அவர்கள் தலைமையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. BSNLEU  பொதுச்செயலர் தோழர்.அபிமன்யு அவர்கள் 
  நாம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

  கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  முடிவுற இருக்கும் நிதியாண்டில் BSNLன் வருவாயை மேம்படுத்தும் பொருட்டு அனைத்து அதிகாரிகளும்... ஊழியர்களும் 
  தினமும்  கூடுதலாக ஒரு மணி நேரம் பணி செய்வது...
  விற்பனையை அதிகரிப்பது  ... 
  சேவையை மேம்படுத்துவது என்பது நோக்கமாகும். 

  கூடுதல் பணிக்காலம் 
  10/02/2017 முதல் 31/03/2017 வரை கடைப்பிடிக்கப்படும்.
   
  • BSNL  நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் பிரதமர் அலுவலகத்தின் முயற்சியைக் கைவிடக்கோரி...
  • செல் கோபுரங்களைப்பிரித்து  துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியைக் கைவிடக்கோரி 
  • 4G அலைக்கற்றையை BSNLக்கு இலவசமாக வழங்கக்கோரி 
  • Reliance Jio நிறுவனத்திற்கு சலுகைகள் காட்டும் அவலத்தை நிறுத்தக்கோரி...
   
  மார்ச் 9 அன்று...
  ஆளுநர் மாளிகை நோக்கி...
  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி...
  நகராட்சி அலுவலகம் நோக்கி...
  நாடு தழுவிய பேரணி...
   
  தோழர்களே... ஒன்றுபடுவோம்... 
  BSNL காப்போம்... தேசம் காப்போம்...

 • சங்க சட்டவிதிகளை ( பைலா ) மரபுகளை மீறிய செயல்

  சங்க சட்டவிதிகளை ( பைலா ) மரபுகளை மீறிய செயல்
  திண்டுக்கல் இண்டோர் கிளை 07 .02 .2017 அன்று கிளைமாநாடு நடத்துவது என தன்னிச்சையாக முடிவு செய்து மாவட்ட சங்கத்தை கலந்து கொள்ளாமலே மாவட்ட செயலர் தோழர் சிவகுருநாதன் துவக்க உரை நிகழ்த்துவர் என துண்டு பிரசுரம் வெளியிட்டு உள்ளது. மாநில  சங்க மேனாள் பொறுப்பாளர் தோழர் விஜயரெங்கன் அவர்களை சங்க சட்டவிதிகளை ( பைலா ) மதிக்காமல் சனநாயக மரபுகளுக்கு முரணாக உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியது இன்று வரை தொடர்கிறது. உறுப்பினராக ஏற்றுக்கொள்ள கிளைசங்கம் மறுக்கின்றது. மாவட்ட சங்க கட்டுப்பாட்டில் திண்டுக்கல் இண்டோர் கிளை செயல்படவில்லை என்பதை தோழர்களுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.  G . ராஜேந்திரன், மாவட்ட செயலர் ( பொறுப்பு ) 

 • சி யு சி சிமிலிருந்து தனியார் கையிடை பேசிக்கு பேசும் வசதி

  சி யு சி  சிமிலிருந்து தனியார் கையிடை பேசிக்கு பேசும் வசதி வழங்கி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 50 ரூபாய்க்கு பேசலாம். முயற்சித்த மத்திய சங்கத்திற்கு நன்றி.

 • பொங்கல் வாழ்த்துக்கள்

  புதுமையுடன் புரட்சிபல பிரிந்தென்றும் தமிழர்
  புத்தாண்டைப் பொங்கலிட்டுக் கொண்டாடி மகிழ்வோம்
  உழவர் விடியலைப் பெற்றிட உழைத்திடுவோம்
  உலகோர் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள்